உங்கள் ஸ்மார்ட் போன் அதிக வெப்பமடையாமல் இருக்க 10 உதவிக்குறிப்புகள்

உங்கள் தொலைபேசி ஏன் சூடாகிறது?

உங்கள் ஸ்மார்ட் போனின் உள் வெப்பநிலை அதன் சூழலின் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் ஸ்மார்ட் போன் மிகவும் சூடாக இருந்தால்,உங்கள் ஸ்மார்ட் போனிற்கு பல பிரச்சனை நேரலாம் உதாரணமாக பாட்டரி டிரெயின் ஆகுதல்(Battery Draining Problem), கட்டாயமாக பணிநிறுத்தம் (Forced Shutdown)மற்றும் மொத்தக் கரைப்பு (Melt Down) போன்ற சிக்கல்களை அனுபவிக்கக்கூடும், உங்கள் ஸ்மார்ட் போனின் மத்திய செயலாக்க அலகு தீவிர வெப்பநிலையை அடைந்தால் உருகும் திறன் கொண்டது ஆகவே போன் சூடுஆவதை தடுக்க கீழ் கொடுக்கப்பட்ட உதவிக்குறிப்பை பின்பற்றுகள்.

உங்கள் தொலைபேசியை அதிக வெப்பமடைவதை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான 5 உதவிக்குறிப்புகள்
  1. அதிக வெப்பத்தைத் தடுக்க எளிதான வழி, உங்கள் ஸ்மார்ட் போனை வெயிலிலிருந்து விலக்கி வைப்பது. உங்கள் தொலைபேசி சூரியனிடமிருந்து வெளிச்சத்தையும் வெப்பத்தையும் பிடித்து அதைத் தக்க வைத்துக் கொள்ளும்,ஆகவே உங்கள் ஸ்மார்ட் போனை வெயிலிலிருந்து விலக்கி வைப்பது அவசியம்
  2. உங்கள் ஸ்மார்ட் போன் அதிக வெப்பமடைகிறது என்றால் அதன் பெட்டியை (Smartphone Case) உடனடியாக அகற்றி விடுங்கள் இப்படி செய்தீர்கள் என்றால் வெப்ப துவாரங்கள் தடுக்கப்படாமல் தங்கள் வேலையை முழுமையாகச் செய்ய அனுமதிக்கும்,மேலும் உங்கள் ஸ்மார்ட் போனை விரைவாக குளிர்விக்க அனுமதிக்கும்.
  3. பயன்படுத்தப்படாத Apps பின்னணியில் இயங்குவதால் உங்கள் ஸ்மார்ட் போன் கடினமாக இயங்குகிறது, இதனால் அது வெப்பமடைகிறது. தீர்வு மிகவும் எளிது பயன்படாத Apps களை மூட செய்யுங்கள் இது உங்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுளையும் அதிகரிக்கும்.
  4. விமானப் பயன்முறை (Airplane) உங்கள் ஸ்மார்ட் போனின் அடிப்படை செயல்பாடுகளைத் தொடர்ந்து பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது, ஆனால் உங்கள் பேட்டரியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிற அத்தியாவசியமற்றவற்றை முடக்குகிறது.
  5. உங்கள் ஸ்மார்ட் போன் பிரகாசத்தை கூட்டுவது உங்கள் பேட்டரி கடினமாக உழைக்க செய்கிறது இது வெப்பத்தை உருவாக்கும்.
உங்கள் சூடான தொலைபேசியை எவ்வாறு குளிர்விப்பது
  1. உங்கள் ஸ்மார்ட் போன் தொடர்ந்து வெப்பமடைகிறது என்றால், உங்கள் ஸ்மார்ட் போனின் அதன் பணிச்சுமையைச் சேர்க்கக்கூடிய தேவையற்ற Apps மற்றும் Games களை உடனடியாக ஸ்மார்ட் போனில் இருத்து நீக்குங்கள்.
  2. மின்விசிறி ஒரு உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது போலவே உங்கள் ஸ்மார்ட் போன் சூடுஅகினால் ஸ்மார்ட் போன் கூலர்களை பயன்படுத்தலாம்.
  3. பல பயன்பாட்டு புதுப்பிப்புகளில் உங்கள் ஸ்மார்ட் போனின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய பிழை திருத்தங்கள் அடங்கும், அதாவது அவை உங்கள் சாதனத்தின் ஆற்றலை குறைவாகவே பயன்படுத்தும்.ஆகையால் ஸ்மார்ட் Update அவ் அப்போது செய்ய பழகி கொள்ளுங்கள்.
  4. உங்கள் ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் மடி கணினியை ஒரு பையில் ஒன்றாக அடுக்கி வைப்பதால் அவை அதிக வெப்பமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவற்றைப் பிரித்து வைத்திருப்பதன் மூலம் அவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுங்கள்.
  5. ஸ்மார்ட் போனை மறுதொடக்கம் செய்வதன் மூலம் சிறிய மென்பொருள் சிக்கல்களால் அதிக வெப்பமடைவதைத் தடுக்க உதவும்.
எச்சரிக்கை: உங்கள் ஸ்மார்ட் போன் குளிர்சாதன பெட்டி அல்லது உறைவிப்பான் ஒன்றில் இரண்டு நிமிடம் வைக்க நீங்கள் ஆசைப்படலாம், ஆனால் நாங்கள் அதை பரிந்துரைக்க மாட்டோம், ஏன் என்றால் போனின் உள் ஈரப்பதத்தை சேகரிக்கும் அபாயம் உள்ளது இதனால் உங்கள் ஸ்மார்ட் போன் செயல் இழக்க ஒரு உறுதியான வழியாகும்.

உங்கள் மொபைலில் நீங்கள் முக்கியமாக செய்யவேண்டிய செட்டிங்க்ஸ்

 


முதலில் நாம் எல்லோரும் நம்முடைய மொபைலில் ஒரு நபர் உடைய அழைப்பு தகவலை சேமிக்க வேண்டும் எனில் இரண்டு முறைகளை கையாளுவோம் ,ஒன்று உங்களுடைய சிம்மில் சேமிப்பது ,மற்றொன்று உங்களுடைய மொபைலில் சேமிப்பது ,இரண்டுமே தவறான செயல்முறை தான் ,


Save Contacts in Gmail: 

இதற்க்கு சிறந்த வழி ,உங்களுடைய கூகிளின் ஜிமெயில் கணக்கில் சேமிப்பது தான் ,இதன் மூலம் தற்செயலாக உங்களுடைய சிம் அல்லது மொபைல் தொலைந்தாலும் உங்களுடைய காண்டாக்ட் தகவல்கள் எளிமையான முறையில் உங்களால் திரும்ப பெற இயலும் .


Contacts Backup: 

இது எப்படி செயல்படுகிறது என்றால் உங்களுடைய தகவல் அனைத்தும் உங்களுடைய ஜிமெயில் அக்கௌன்ட் மூலமாக சேமிக்கப்பட்டு ,அந்த தகவல்கள் அந்த மெயிலில் சேமிக்கபடும் ,நீங்கள் ஏதேனும் புதிய மொபைல் வாங்கினாலும் அந்த மொபைலில் இந்த ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் உள் நுழைந்தால் உங்களுக்கு பழைய மொபைலில் இருக்கும் அனைத்து தகவல்களும் அந்த மொபைலுக்கு எளிதாக மாறிவிடும்.


இதை உங்கள் மொபைலில் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்


Sync Contacts from Phone to Gmail: 

முதலில் உங்களுடைய மொபைலில்காண்டாக்ட்(Contacts) பகுதிக்கு செல்லவும்.பிறகு அதில் contact settings என்கிற பகுதி இருக்கும்அதை கிளிக் செய்யவும் .அதில் import ,export contact என்கிற வசதி இருக்கும் அதைகிளிக் செய்யவும்.கீழ் பகுதியில் Advanced option என்கிற பகுதில் user defined import export என்கிற வசதி இருக்கும்.இதை கிளிக் பண்ணும் பொழுது நெறய வசதி கொடுக்கப்பட்டுஇருக்கும்.


Backup Contacts to Gmail: 

முதலில் மேல்பகுதியில் copy contacts from என்று கொடுக்கப்பட்டு இருக்கும். அதாவது எந்த காண்டாக்ட் எல்லாம் நீங்கள் உங்களுடைய ஜிமெயில் அக்கௌன்ட்க்கு மாற்ற விரும்புகிண்றீர்கள் என்கிற வசதி தான் இது .இதில் உங்களுடைய மொபைல் மெமரி அல்லது உங்களுடைய சிம் மெமரி ஏதாவது ஒன்றை தேர்வு செய்தவுடன் ,கீழே Next என்கிற வசதி இருக்கும்,அதை நீங்கள் தேர்வுசெய்த உடன் ,அடுத்து எந்த ஜிமெயில் அக்கௌன்ட்இல் இதை மாற்ற வேண்டும் என்று கேட்கும் ,அதில் நீங்கள் உங்களுடைய பிரதான ஜிமெயில் கணக்கை தேர்வு செய்த உடன் உங்களுக்கு உங்கள் மொபைலில் உள்ள contacts இருக்கின்ற பகுதிக்கு செல்லும் ,இதில் நீங்கள் select all என்கிற வசதியை தேர்வு செய்து ,பிறகு கீழ் பகுதியில் copy என்ற வசதி இருக்கும் இதை தேர்வு செய்தால் அனைத்தும் copy ஆகிவிடும்.


Gmail Contacts: 

மேலும் நீங்கள் புதிய நபர்களின் பெயர்களை உங்கள் மொபைலில் பதிவேற்றும் பொழுது கீழ் பகுதியில் உள்ள save to என்கிற வசதியை மறவாமல் கவனிக்க வேண்டும் ,நீங்கள் செய்யும் தவறு உங்களுடைய சேமிப்பை மொபைல் அல்லது சிம்மில் தேர்வு செய்வது ,இதற்கு மேல் நீங்கள் உங்கள் காண்டாக்ட் தகவலை உங்கள் மெயிலில் சேமிக்க ஆரம்பியுங்கள்.

Hackers இடமிருந்து உங்கள் மொபைலை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறை.

வணக்கம் நண்பா, நாம் ஆண்ட்ராய்ட் மொபைல் தான் பயன்படுத்தி வருகிறோம். ஆண்ட்ராய்டு ஒரு open source என்பதால் எவர் வேண்டுமானாலும் ஆண்ட்ராய்டு வடிவமைப்பை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் நமது android மொபைல் ஹேக் செய்யப்படுகிறது சில வழிமுறைகள் உண்டு.


எவ்வாறு ஹாக் செய்யப்படுகிறது:

  1. Link share செய்வதன் மூலம்.
  2. தேவையற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்வதன் மூலம்.
  3. தேவையில்லாத Website செல்வதன் மூலம்.
  4. தேவையற்ற செய்திகள் recive செய்வதன் மூலம்(SMS reciving).
  5. Short link 

எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்:

  1. Google play ஸ்டோரில் உள்ள செயல்களைத் தவிர வேற எந்த செயலையும் வேற எந்த முறையிலும் பதிவிறக்கம் செய்ய கூடாது.

     
  2. வேண்டியவர்கள் ஏதேனும் லிங்க் ஷேர் செய்தால் கூட அந்த லிங்க் மூலம் நமது தகவல்கள் திருடப்படலாம். அந்த லிங்க் ஆபத்தானதா என்பதை அறிந்துகொள்ள அந்த லிங்கில் http or https என்னும் அங்கீகாரம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். 

  3. பணம் அளித்து பெற்றுக்கொள்ளும் சேவையை பைரஸி முறையில் MOD versions என அழைக்கப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்து install செய்யக்கூடாது.

  4. தேவையற்ற SMS உங்கள் மொபைலுக்கு வந்தால் அந்த நம்பரை பிளாக் செய்வது மிக மிக நன்று.

  5. முடிந்த அளவு tamilrockers அல்லது மற்றும் பல piracy வலைத்தளங்களுக்கு செல்லும்பொழுது TOr browser போன்ற செயலிகளை பயன்படுத்திக் கொள்ளவும்.
  6. பணப் பரிவர்த்தனைகள் செய்யும்பொழுது ஸ்கிரீன் ரெக்கார்டர் அல்லது ஸ்கிரீன் ஷாட் போன்ற வசதிகள் இயக்கத்தில் இருந்தால் ஆப் செய்து கொள்ளவும்.

OnePlus 9 Pro renders, OnePlus 9E, OnePlus 8T Cyberpunk 2077, and more

Check the top news about OnePlus below.

1.Here’s the animation video of the OnePlus 9 Pro
2.OnePlus 9 series will come in three variants
3.OnePlus 8T Cyberpunk 2077 does not have sandstone back
4.OnePlus Buds are not working properly

Here’s the animation video of the OnePlus 9 Pro:
OnePlus is said to launch its next flagship series in March 2021. The series includes two smartphones – OnePlus 9 and OnePlus 9 Pro. Meanwhile, with each passing day, we are getting a bunch of leaks and rumors about these phones. This time it is an animation video of the OnePlus 9 Pro. 

OnePlus 9 series will come in three variants:
We have seen our first look at the OnePlus 9 and OnePlus 9 Pro, and now according to a new rumor, the company will be launching a third device alongside the OnePlus 9 and 9 Pro early next year.

As per the rumor, the OnePlus 9 and 9 Pro will be launched with a third device, the third OnePlus 9 series device will be called the OnePlus 9E. 


OnePlus 8T Cyberpunk 2077 does not have sandstone back:
We can now confirm the OnePlus 8T Cyberpunk 2077 Limited Edition has a fake sandstone back, as initially suspected. The smartphone in question hit the market earlier this month, and one YouTuber promptly took it apart on video. 

OnePlus Buds are not working properly:
OnePlus Buds are cheaper than many other earbuds and of course, they give great sound quality but only when they actually work. As per some users’ reports on the forum, these earbuds are not working as expected. Users are facing many problems as their left bud is not giving proper sound.