உங்கள் மொபைலில் நீங்கள் முக்கியமாக செய்யவேண்டிய செட்டிங்க்ஸ்

 


முதலில் நாம் எல்லோரும் நம்முடைய மொபைலில் ஒரு நபர் உடைய அழைப்பு தகவலை சேமிக்க வேண்டும் எனில் இரண்டு முறைகளை கையாளுவோம் ,ஒன்று உங்களுடைய சிம்மில் சேமிப்பது ,மற்றொன்று உங்களுடைய மொபைலில் சேமிப்பது ,இரண்டுமே தவறான செயல்முறை தான் ,


Save Contacts in Gmail: 

இதற்க்கு சிறந்த வழி ,உங்களுடைய கூகிளின் ஜிமெயில் கணக்கில் சேமிப்பது தான் ,இதன் மூலம் தற்செயலாக உங்களுடைய சிம் அல்லது மொபைல் தொலைந்தாலும் உங்களுடைய காண்டாக்ட் தகவல்கள் எளிமையான முறையில் உங்களால் திரும்ப பெற இயலும் .


Contacts Backup: 

இது எப்படி செயல்படுகிறது என்றால் உங்களுடைய தகவல் அனைத்தும் உங்களுடைய ஜிமெயில் அக்கௌன்ட் மூலமாக சேமிக்கப்பட்டு ,அந்த தகவல்கள் அந்த மெயிலில் சேமிக்கபடும் ,நீங்கள் ஏதேனும் புதிய மொபைல் வாங்கினாலும் அந்த மொபைலில் இந்த ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் உள் நுழைந்தால் உங்களுக்கு பழைய மொபைலில் இருக்கும் அனைத்து தகவல்களும் அந்த மொபைலுக்கு எளிதாக மாறிவிடும்.


இதை உங்கள் மொபைலில் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்


Sync Contacts from Phone to Gmail: 

முதலில் உங்களுடைய மொபைலில்காண்டாக்ட்(Contacts) பகுதிக்கு செல்லவும்.பிறகு அதில் contact settings என்கிற பகுதி இருக்கும்அதை கிளிக் செய்யவும் .அதில் import ,export contact என்கிற வசதி இருக்கும் அதைகிளிக் செய்யவும்.கீழ் பகுதியில் Advanced option என்கிற பகுதில் user defined import export என்கிற வசதி இருக்கும்.இதை கிளிக் பண்ணும் பொழுது நெறய வசதி கொடுக்கப்பட்டுஇருக்கும்.


Backup Contacts to Gmail: 

முதலில் மேல்பகுதியில் copy contacts from என்று கொடுக்கப்பட்டு இருக்கும். அதாவது எந்த காண்டாக்ட் எல்லாம் நீங்கள் உங்களுடைய ஜிமெயில் அக்கௌன்ட்க்கு மாற்ற விரும்புகிண்றீர்கள் என்கிற வசதி தான் இது .இதில் உங்களுடைய மொபைல் மெமரி அல்லது உங்களுடைய சிம் மெமரி ஏதாவது ஒன்றை தேர்வு செய்தவுடன் ,கீழே Next என்கிற வசதி இருக்கும்,அதை நீங்கள் தேர்வுசெய்த உடன் ,அடுத்து எந்த ஜிமெயில் அக்கௌன்ட்இல் இதை மாற்ற வேண்டும் என்று கேட்கும் ,அதில் நீங்கள் உங்களுடைய பிரதான ஜிமெயில் கணக்கை தேர்வு செய்த உடன் உங்களுக்கு உங்கள் மொபைலில் உள்ள contacts இருக்கின்ற பகுதிக்கு செல்லும் ,இதில் நீங்கள் select all என்கிற வசதியை தேர்வு செய்து ,பிறகு கீழ் பகுதியில் copy என்ற வசதி இருக்கும் இதை தேர்வு செய்தால் அனைத்தும் copy ஆகிவிடும்.


Gmail Contacts: 

மேலும் நீங்கள் புதிய நபர்களின் பெயர்களை உங்கள் மொபைலில் பதிவேற்றும் பொழுது கீழ் பகுதியில் உள்ள save to என்கிற வசதியை மறவாமல் கவனிக்க வேண்டும் ,நீங்கள் செய்யும் தவறு உங்களுடைய சேமிப்பை மொபைல் அல்லது சிம்மில் தேர்வு செய்வது ,இதற்கு மேல் நீங்கள் உங்கள் காண்டாக்ட் தகவலை உங்கள் மெயிலில் சேமிக்க ஆரம்பியுங்கள்.

No comments:

Post a Comment

Thanks for your message 😍😍