Hackers இடமிருந்து உங்கள் மொபைலை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறை.
வணக்கம் நண்பா, நாம் ஆண்ட்ராய்ட் மொபைல் தான் பயன்படுத்தி வருகிறோம். ஆண்ட்ராய்டு ஒரு open source என்பதால் எவர் வேண்டுமானாலும் ஆண்ட்ராய்டு வடிவமைப்பை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் நமது android மொபைல் ஹேக் செய்யப்படுகிறது சில வழிமுறைகள் உண்டு.
இந்தியாவின் பட்ஜெட் டெஸ்லா.. வெறும் ரூ.7 லட்சத்தில் எலக்ட்ரிக் கார்..!
ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரிப்பைத் தடை செய்ய ஆலோசனை செய்து வருகிறது.
இந்நிலையில் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பில் மற்றும் விற்பனையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது டெஸ்லா, இந்தியாவில் தனது தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்யப் புதிதாக ஒரு நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மாடல் 3 காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு டெஸ்லா சுமார் 55 - 60 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்ய உள்ளது.
இதேவேளையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்திய மக்களுக்காக வெறும் 7 லட்சம் ரூபாயில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம்
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய வேண்டும் என நீண்ட காலமாகத் திட்டமிட்டு வரும் மாருதி சுசூகி நிறுவனம், தனது வெற்றிகரமான பிராண்டான வேகன்ஆர் பிராண்டின் கீழ் புதிதாக எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளதாக மோட்டார் ஆக்டேன் தளம் தெரிவித்துள்ளது.
ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல்.. 5ஜி சேவை கொடுக்க ரெடி..
இந்தியாவில் 4ஜி சேவை அறிமுகத்தின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களைப் பெற்றும் வெறும் 5 வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் அடுத்த சில மாதத்தில் மத்திய அரசு விற்பனை செய்ய உள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் இச்சேவையை மக்களுக்கு அளிப்பதற்காகத் தயாராகி வருகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவைக்காகப் பல்வேறு நிறுவன கூட்டணி உடன் புதிய தொழில்நுட்பம் மற்றும் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் 2021ஆம் ஆண்டு முடிவதற்குள் ரிலையன்ஸ் ஜியோ முழுமையான 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உறுதியாக இருக்கிறது
5ஜி சேவை
இந்நிலையில் 4ஜி சேவையைப் போல் 5ஜி சேவையிலும் ஜியோ உடன் போட்டிப்போட யாருமே இல்லை என நினைத்திருந்த நிலையில், பல்வேறு வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பிற்கு இடையிலும் ஏர்டெல் இந்தியாவில் 5ஜி சேவையைக் கொடுக்கத் தயாராகியுள்ளது
பார்தி ஏர்டெல்
இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் தற்போது செயல்பாட்டில் இருக்கும் டெலிகாம் கட்டமைப்பின் வாயிலாகவே 5ஜி சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)