ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல்.. 5ஜி சேவை கொடுக்க ரெடி..

இந்தியாவில் 4ஜி சேவை அறிமுகத்தின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களைப் பெற்றும் வெறும் 5 வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் அடுத்த சில மாதத்தில் மத்திய அரசு விற்பனை செய்ய உள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் இச்சேவையை மக்களுக்கு அளிப்பதற்காகத் தயாராகி வருகிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவைக்காகப் பல்வேறு நிறுவன கூட்டணி உடன் புதிய தொழில்நுட்பம் மற்றும் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் 2021ஆம் ஆண்டு முடிவதற்குள் ரிலையன்ஸ் ஜியோ முழுமையான 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உறுதியாக இருக்கிறது

5ஜி சேவை
இந்நிலையில் 4ஜி சேவையைப் போல் 5ஜி சேவையிலும் ஜியோ உடன் போட்டிப்போட யாருமே இல்லை என நினைத்திருந்த நிலையில், பல்வேறு வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பிற்கு இடையிலும் ஏர்டெல் இந்தியாவில் 5ஜி சேவையைக் கொடுக்கத் தயாராகியுள்ளது

பார்தி ஏர்டெல்
இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் தற்போது செயல்பாட்டில் இருக்கும் டெலிகாம் கட்டமைப்பின் வாயிலாகவே 5ஜி சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment

Thanks for your message 😍😍